பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி மறந்தவர் I 1.5

நம்மை வாழச் செய்யும் இறைவனை நினைத்து வணங்கி வாழ்தலே முறையாகும்.

‘’ பெற்றதாய்தனை மறந்தாலும்

பிள்ளையைப்பெறுந் தாய்மறந்தாலும்

உற்றதேகத்தை உயிர்மறந்தாலும்

உயிரைமே விய உடல்மறந்தாலும்

கற்றநெஞ்சகம் கலைமறந்தாலும்

கண்கள் நின்று இமைப்பதுமறந்தாலும்

நற்றவத்துள் ளிருந்தோங்கும்

நமசிவாயத்தை நான் மறவேனே ’’

என்கிறார் இராமலிங்க சுவாமிகள். பெற்ற தாயைப் பிள்ளை மறந்தாலும், பிள்ளை தாயை மறந்தாலும், உடலை உயிர் மறந்தாலும், உயிரை அதனோடு பொருந் தியிருக்கின்ற உடல் மறந்தாலும், அரும்பாடுபட்டுக் கற்ற கல்வியை மனம் மறந்து போனாலும், எப்போதும் இமைக்கும் கண்கள் இமைக்க மறந்தாலும் உடலுக் குள்ளே உயிருக்குள்ளே உயிருக்கு உயிராய் உறையும் இறைவனை மறக்க மாட்டேன் என்கிறார் வடலூற் பெருமானாகிய வள்ளலார்.

இறைவனைத் தன் முனைப்பால்-தான் என்ற கர்வத்தால்-செல்வச் செழிப்பால்-இன்ப துன்ப வாழ் வால் மறந்தவர் இறைவன் உறையும் மோட்ச வுலகத் தையும் மறந்து, தாம் வாழும் மண்ணுலகத்தையும் புத்தி மயங்கி புன்மையாலே மறந்தவர் ஆவார்கள் என்று உமறுப்புலவர் அழுத்தமாக அறிவுறுத்துகின்றார்.

நினைப்பவர் மனமே கோயிலாகக் கொண்ட இறைவன் ஒருவனே. -