பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 நல்லோர் நல்லுரை

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள் எடுத்துரைத்தே எம்துதெய்வம் எமதுதெய்வம் என்று கைவகையே கதறுகின்றீர் தெய்வமொன்றென்று அறியீர்

என்ற இராமலிங்க சுவாமிகள் திருவாக்கினை நோக்கு வோமாக.

மேலும் வணக்கத்திற்குரிய மகம்மது நபிகள் நாயகம் அவர்கள் இந்நிலவுலகத்திற்கு வழங்கிய செய்தி யாகத் தமிழ்ப்பெரியார் திரு. வி. க. அவர்கள் குறிப்பிட் டுள்ள பாடல் வருமாறு:

அரபிய நாட்டில் தோன்றி

ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த

மகம்மது நபியே! போற்றி! தரையினிற் பொய்மை மல்கிச்

சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த

கருணையே! போற்றி! போற்றி! “

-திரு. வி. க.

இதுகாறும் கூறியவற்றால் உமறுப்புலவர் கூறும் கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தினை ஒருவாறு உணர்ந்து கொண்டோம். இறைவன் ஒருவன்; அவன் பிறப்பு இறப்பு அற்றவன்; அவனை வணங்கி வாழ் வதே இவ்வுலக உயிர்கள் உய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல் என்பதனை இப்பாடல் வழியே நாம் பெற்றோம்.

இசை வடிவான இறைவனை இசையோடு பாடி வணங்கி வாழ்வோமாக!