பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்கிய வாயினர் 9

‘‘. . . . . . இரும்பிற் போர்த்த

பழுதெண்ணும் வன்மனத்தார் ஒட்டை மரச் செவியர்

■ 輯 ■ 暉 軒 .......கேளார்.’ - a (சீவக : 1552)

எனவே கேள்வியறிவினைக் கேட்டுப் பெறாதவர், செவியிருந்தும் .ெ ச வி ட ரா ய் வாழுவோரேயாவர். இதனையே திருவள்ளுவர்,

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி ’’

-திருக்குறள் : 418 என்கிறார். ==

3

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது ‘

-திருக்குறள் : 419

ஒருவருடைய கருத்தை அவர் சொற்களால் வெளிப் படுத்தப் பிறிதொருவர் செவிகளால் கேட்டு மற்றொருவர் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இம்மட்டோடு அமைந்து விட்டால், செவியின் கடமை முற்றுப்பெற்றதாக ஆகாது. செவி கேள்விச் செல்வத்தினை மேலும் மேலும் பெற வேண்டும். ஒரு பொருளை ஆழமாக அணுகிக் கற்றவர் அப் பொருளினை உள்ளவாறு அறிந்தவராவர். அத்தகைய அறிஞர் ஒரு பொருளை மருட்சியோடு நோக்கமாட்டார்: தெளிவோடு நோக்குவார். தங்களுக்குத் தெளிவு வந்து விட்ட காரணத்தால் பிறருக்கும் அவர்கள் தெளிவை ஏற்படுத்த முடியும். கற்கக் கற்க அறியாமை இருள் அகன்று அறிவு என்னும் ஒளி வந்து நிறைகிறது. இது