பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமை உணர்வு I IQ

தமிழ்நாட்டு இளைஞன் அமர்ந்துள்ளான். இருவரும் சுந்தரத் தெலுங்கிற் பாட்டிசைக்கின்றார்கள். நாட்டின் வடக்கே சிந்து நதி, கீழ்க்கோடியில் கேரளம்; அதனை யடுத்துத் தமிழ்நாடு; அதனையும் அடுத்து ஆந்திரா - இந்த நான்கு நாடுகளையும் ஒருங்கிணைத்து ஒர் உற் சாகப் பாடல். இம்மட்டோடு நிற்கவில்லை பாரதி. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டத்தினைக் காவிரி வெற்றிலைக்குப் பண்ட மாற்றுச் செய்து கொள் வோம் என்கிறார். சிங்க மராட்டியரின் சீர்சால் கவிதை களுக்குச் சேரநாட்டுத் தந்தங்களைப் பரிசளிப்போம் என்றும், காசிநகர்ப் புலவர் பேசும் உரைதனைக் காஞ்சி மாநகரிற் கேட்பதற்கு ஒரு கருவி செய்வோம் என்றும் உரைக்கிறார். இராசபுதனத்து வீரர்தமக்குக் கன்ன டத்துத் தங்கத்தை வழங்குவோம் என்று கூறி மகிழ்கி றார் பாரதி. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைத்துச் சேதுவை மேடாக்கி வீதி சமைத்து இரு நாடுகளுக் கிடையே நல்லுறவுப் பாலத்தை நட்புறவுப் பாலத்தை அமைப்போம் என்கிறார். வங்க நாட்டில் ஆற்று நீர்ப் பெருக்கின் மிகுதியைத் திருப்பிவிட்டு நீர்வளம் குறைந்த மையத்து நாடுகளிற் பயிர் செய்வோம் என்கிறார்.

‘முப்பது கோடி முகமுடை யாளுயிர்

மொய்ம்புற வொன்றுடையாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள்’

என்றும்,

‘முப்பது கோடி ஜனங்களின் சங்க

முழுமைக்கும் பொதுஉடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை’