பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நல்லோர் நல்லுரை

என்றும் பாரதி, “பாரத நாடு’ என்னும் வீணையில் “ஒருமைப்பாடு’ என்னும் கீதத்தினை இனிமையுற இசைக் கின்றார்.

‘ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில் என்றும், இழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே’ என்றும் கூறிக் கல்விச் செல்வம் பொருட் செல்வம் இரண்டனையும் பெற்று ஆண்களும் பெண்களும் ஏன்? மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோர் என்கிறார் எட்டையபுரம் தந்த எழிற்கவிஞர் பாரதியார்.

‘எல்லாரு மோர்குலம் எல்லாரு மோரினம்

எல்லாரு மிந்திய மக்கள் எல்லாரு மோர்நிறை எல்லாருமோர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-காம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்’

என்று அழுத்தந் திருத்தமாக மூன்று முறை முழங்கு கின்றார் பாரதி.

‘ஒன்று பட்டாலுண்டு வாழ்வே நம்மில்

ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்’ என்று நாட்டு மக்களின் ஒற்றுமையினை வற்புறுத்தும் கவிஞர்,

“எப்பதம் வாய்த்திடு மேனும்-கம்மில்

யாவர்க்கு மந்தநிலை பொதுவாகும் முப்பது கோடியும் வாழ்வேம்-விழில்

முப்பதுகோடி முழுமையும் வீழ்வேம்’ என்றும் குறிப்பிடுகின்றார்.