பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமை உணர்வு I2 I

தாயின் மணிக்கொடியின் கீழ்ச் செந்தமிழ் நாட்டுப் பொருநரும், சேர நாட்டு வீரர்களும், சிந்தை துணிந்த தெலுங்கர்களும், தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர்களும், கன்னடியர்களும், ஒட்டியராம் ஒரியாக் காரர்களும் போரிற் காலனும் அஞ்சக் கலக்கும் மராட் டியர்களும் பொன்னகர்த் தேவர்களொப்ப நிற்கும் பொற் புடையராம் இந்துஸ்தானத்து மல்லர்களும், ராஜபுத்ர வீரர்களும், பஞ்சநதத்தப் பிறந்தோர்களும், துஞ்சிய பொழுதினும் தாயின் பதத்தொண்டு நினைத்திடும்’ வங்கத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று, தாயின் மணிக் கொடியைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திடும் அற்புதக் காட்சியின் மாட்சியினையும் பாடுகிறார் பாரதியார்.

இவ்வாறு பாரதியார், பாரத நாட்டு மக்கள் அனை வரும் ஒற்றுமை உணர்வோடு - ஒருமைப்பாட்டுச் சிந் தையுடன், பாரதத் தாயின் திருப் புதல்வர்கள் என்ற வீறார்ந்த பெருமையுடன் வாழ வேண்டும் என்பதனைச் சித்திரித்துக் காட்டி நிற்பதோடு, சேதமில்லாத இந்துஸ் தானத்தில் பேதமில்லாமல் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒருங்கிணைந்து வாழும் மாட்சியினை - பாரத நாட்டின் ஒருமைப்பாட்டினைப் பண்போடும் பயனோ

டும் குறிப்பிடுகின்றார்.