பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகள்

15. அண்ணலின் அருட் சிந்தனைகள்

1

உலகப் புகழ் பெற்ற உயர்ந்த தலைவர்கள் மிகச் சிலருள்ளும் சிறந்தவராகத் திகழ்பவர் நாட்டின் தந்தை’ என நம்மால் அன்புடன் அழைக்கப் பெறும் காந்தி யடிகள் ஆவர். -

அன்னை பாரதம் பெற்ற பிள்ளையுள் அண்ணல் காந்தியடிகளே முதல் பிள்ளை; பரந்த பூமியும் விரிந்த வானுமே சிறந்த அவருடைய புகழ் எல்லை.

அவர்தம் உலகப் புகழுக்குக் காரணமாக விளங்கு வதே அகிம்சைக் கொள்கை. ஆயுதப் புரட்சியின் காரணமாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கு உதாரண மாக எத்தனையோ நாடுகளைக் காட்ட முடியும். அன்பில்-அகிம்சையில் இன்ப சுதந்திரம் அடைந்த நாடு இந்தியா ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அப்பெருமை யைப் பெற்றுத் தந்த மகாத்மாவே காந்தியடிகள்.

வன்முறை வெறியாட்டங்கள் மூலமே சுதந்திரம் பெற முடியும் என்று கூறிய மற்றவர்களுக்கு அன்பு வழியைக் காட்டினார். அந்நியராம் ஆங்கிலேயர் மனம் என்னும் பாறையில், இந்தியாவின் சுதந்திரம் என்னும் உரிமைச் சிற்பத்தை வடிக்க அவர் எடுத்துக் கொண்ட உளி, அன்பு