பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணலின் அருட்சிந்தனை 1 2 3

என்னும் சிற்றுளியாகும். அகிம்சை என்பதை விளக்க வந்த காந்தியடிகள், ‘அக்கிரமத்துக்கு எதிரான உண்மைப் போராட்டத்திலிருந்து அடியோடு விலகி யிருப்பதுதான் அகிம்சை என்று கூறுவது சரியல்ல. இதற்கு மாறாக என் கருத்தின்படி அமைந்த அகிம்சை யானது அக்கிரமத்துக்கு எதிராக உள்ள அதிதீவிரமான உண்மையான போராட்டமாகும்’ என்று விளக்கியிருக் கிறார்.

அகிம்சை கோழைகளின் ஆயுதம் என்பதைக் காந்தியடிகள் உறுதியுடன் மறுக்கிறார்.

‘என்னுடைய அகிம்சைக் கோட்பாடு, மிகுந்த வீரியம் வாய்ந்த சக்தியாகும். கோழைத் தனத்திற்கோ, பலவீனத்துக்கோகூட, அதில் இடமில்லை’ -

என்கிறார் அவர்.

விவேகானந்தர் ஒருமுறை புகைவண்டியில் பயணம் சென்றபோது, அவருடைய இளமையையும், துறவுத் தோற்றத்தையும் அருகிலிருந்த இருவர், ஆங்கிலத்தில் பரிகசித்தவண்ணம் உரையாடி வந்து கொண்டிருந்தனர். விவேகானந்தர் ஆங்கிலம் அறிந்திருக்க மாட்டார் என்பது அவர்களின் நினைப்பு. அவர்களின் வசை மொழி களைக் கேட்டும் கேளாதவராய் வந்த விவேகானந்தர், ஒரு நிலையத்தில் வண்டி நின்றதும் அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் ‘குடிக்கத் தண்ணிர் கிடைக்குமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டாராம். அதனைக் கவனித்துக் கொண்டிருந்த அவரைப் பரிகசித்த இருவரும், விவே கானந்தரின் பொறுமையைப் போற்றி, தம்மை மன்னிக் குமாறு வேண்டிய நிகழ்ச்சியை, விவேகானந்தர் வரலாறு