பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 24 நல்லோர் நல்லுரை

வாயிலாக அறிந்துள்ள எவரும், இம்சைவாதிகளையும் வெற்றி கொள்வது அகிம்சை என்பதை அறிந்துகொள்ள முடியும்.

காந்தியடிகளும், ‘'மிருகத்தனத்தை மிருகத்தனத்தால் ஒருவர் எதிர்ப்பது தம்மிடம் ஒழுக்கமும் அறிவும் இல்லை என்று ஒப்புக்கொள்வதாகும். பலாத்காரத்தைவிட அகிம்சை மிக மிக உயர்வானது. தண்டிப்பதைவிட மன்னிப்பதில் அதிக ஆண்மை இருக்கிறது. மன்னிப் பது போர் வீரனுக்கு அணிகலன். ஆனால் தண்டிக்கும் சக்தி இருக்கும்போது தண்டிக்காமல் இருப்பதுதான் உண்மையான மன்னிப்பு. கையாலாகாத ஒர் உயிர் மன்னிப்பதாக நடிப்பதில் அர்த்தமில்லை” என்று கூறி யுள்ளார்.

சிறு வயதில் வீட்டில் பெற்றவர்களுக்குத் தெரியாமல் காசுகளைத் திருடியும், மாமிசம் உண்டும் காந்தியடிகள் செய்த தவறுகளைத் தண்டித்துத் திருத்தாமல், மன்னித்து மாற்றிய அவர்தம் தந்தையின் அகிம்சை யன்றோ, காந்தியடிகளை அகிம்சா மூர்த்தியாக்கியது!

பலாத்காரத்தின் துணையால் விளையும் பயன் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதனாலேயே, காந்தியடிகள் அகிம்சையை வற்புறுத்திக் கூறியுள்ளார்.

‘பலாத்கார அஸ்திவாரத்தின் மீது சாசுவதமான எதையும் நிருமாணிக்க முடியாது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. பலாத்காரம் நன்மை தருவ தாகத் தோன்றினாலும் அது அளிக்கிற நன்மை தற் காலிகமானது. அது செய்கிற தீமையோ நிரந்தரமானது. அதனால்தான் பலாத்காரத்தை நான் ஆட்சேபிக் கிறேன்."