பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணலின் அருட்சிந்தனை I25

தேவருலகத்து தேவாமிர்தமே கிடைப்பதாக இருந்தாலும் அஃது இனிமை தரத்தக்கதென்று கருதித் தாங்களாகவே தனித்துச் சாப்பிட்டுவிட மாட்டார்கள். தாங்கள் மேற்கொண்ட வினையில் சோர்வுற மாட் டார்கள். பிறர் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள். எப்போதும் பிறர்க்கென வாழும் பெருமனம் உடையவராய் வாழ் வார்கள். இத்தகையோர் வாழுகின்ற காரணத்தால் தான் இந்த உலகம் இடையறாது இயங்கிக் கொண்டிருக் கின்றது என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தமிழகத்தில் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற மன்னன் பொருத்தமுறப் புகன்றான்.

‘உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே’

-புறநானூறு: 182. இத்தகைய நல்லோர்-பிறர்க்கென நம் காலத்தில்

வாழ்ந்த பெரியவர், நாட்டுத் தந்தை காந்தியடிகள் ஆவார்.

2

புவியினில் தருமம் காத்திடத் தெய்வம் பலமுறை பிறக்கும் என்று கூறுவர். புத்தர், ஏசு இவரிகளைப்