பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நல்லோர் நல்லுரை

போல அறத்தைக் காத்திடப் பிறந்தவராகிய அண்ணல் காத்தியடிகளும் மாந்தருள் ஒரு தெய்வம் ஆவர்.

காந்தியடிகள் வறுமையை ஒழிக்க வற்புறுத்திய கொள்கைகளுள் ஒன்று தர்மகர்த்தாப் பொதுவுடைமைக் கொள்கை.

“பணக்காரர்கள் தங்களிடம் உள்ள அதிகப்படியான செல்வத்துக்குத் தர்மகர்த்தாக்கள் தாம் என்பது சமத் துவ வினியோகம் என்ற இந்தச் சித்தாந்தத்தின் ஆணி வேராகும்’, என்று கூறியுள்ளார் காந்தியடிகள்.

‘இதன்படி பணக் கா ர ரி ன் செல்வம் அவரிடமே இருக்கும். தம்முடைய நியாயமான சொந்தத் தேவைக்கு வேண்டிய அளவுக்கு அதிலிருந்து அவர் உபயோகித்துக்கொள்வார். எஞ்சியதற்கு அவர் . தர்மகர்த்தாவாக இருந்து அதைச் சமூகத்துக்கும் பயன்படுத்துவார். தர்மகர்த்தாவிடம் நேர்மை இருக்கும் என்ற ஊகத்துடன் இந்த வாதம் கூறப்படுகிறது”

என்று தம் தர்மகர்த்தாப் பொதுவுடைமைக் கொள் கையை விளக்கிக் கூறியுள்ளார் அவர்.

செல்வத்தின் பயன் யாது? என்ற வினாவிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விடை கூறிய நக்கீரனார், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று அழகுறச் சொன்னார்.

கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் உரிமை யுடையவனாய் ஆளும் வேந்தனுக்கும், இரவும் பகலும் உறக்கமின்றி விலங்குகளை வேட்டையாடி வாழும் வேடுவ னுக்கும், உண்ணத் தேவையானது நாழி அரிசி. அது போல் உடுக்கத் தேவையானதும் இரண்டாடைகள். பிற