பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I0 நல்லோர் நல்லுரை

போன்றே நுட்பமான அறிவுடையவர் ஒரு பொருளினை விளக்கிச் சொல்லச் சொல்ல அதனைக் கேட்பவர் கேள்வி நுட்பத்தினைப் பெறுகின்றனர். படிப்பு என்ற பெயர்ச் சொல் படிதல்’ என்னும் வினையினையும் உணர்த்தி நிற்கிறது. படிக்கப் படிக்க வாழ்க்கையில் படிந்துபோகும் தன்மை ஏற்படுகிறது; அடங்காமை அகன்று அடக்கம் ஏற்படுகிறது. இதனையே திருத்தக்கதேவர்.

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

என்கிறார். வயலில் நெற்பயிர் பசுமையாகத் தொடக்கத் தில் இளம்பயிராய் நிற்கும்போது நிமிர்ந்து நிற்கிறது. கதிர் வாய்த்துப் பின் அவை முற்றியதும் பசுந்தாள்கள் மஞ்சள் நிறம் பெற்றதும், நெற்கதிர்கள் கீழே தலை சாய் கின்றன. கல்வி நிறைந்தோரும் கல்வி சேரச் சேர ஆர வாரம் குறைந்து அடக்கம் மிகுந்து காணப்படுவர்.

செவிகளால் கேட்டுக்கேட்டுக் கற்றறிந்த நல்லவரும் வாயிற்பிறக்கும் சொற்களில் அடக்கங் காட்டுவர். நடக் கும் பான்மையில் அடக்கத்தைப் பிரதிபலிப்பர். எனவே நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவரே வணக்க மான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக

இருக்கமுடியும்.

வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான் ‘

(கம்பராமாயணம் : விபீடணன் அடைக்கலப் படலம் : 87)

என்று கம்பர் வீடணன், இராமனிடம் அடைக்கலம் கேட் கச் சென்றபோது, நுட்பமான கேள்விச் செல்வம் பெற்று, மறைத்த-அடங்கிய-பணிந்த வாயினனாக இருந்தனன் என்று குறிப்பிட்டுள்ளார்.