பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணலின் அருட்சிந்தனை I27

தேவைகள் அனைத்துங்கூட எல்லோருக்கும் ஒரே தன்மையனவே ஆகும். ஆகையினால் செல்வத்தாற் பெறும் பயனாவது கொடுத்தல். கொடாமல் செல்வம் முழுவதும் கொண்டவரே துய்ப்போம் எனக் கருதினால் கேடுகள் மிகப் பல உண்டாகும்’ என்று அன்று நக்கீரர் அறிவுறுத்திய அதே அறத்தைத்தான் அண்ணல் காந்தி யடிகளும் அறிவுறுத்தக் காண்கிறோம்.

‘தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுங் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்பு பலவே’

-புறநானுாறு : 189

‘கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க ஆட்சேபணை இல்லை. ஆனால் உங்கள் சொத்து உங்களுடையது அல்ல, மக்களுக்குச் சொந்தமானது என்பதைத் தெரிந்துகொள் ளுங்கள்; பாக்கியைச் சமூகத்துக்குப் பயன் படுத்துங்கள்”

என்று கூறியுள்ள காந்தியடிகள், அவ்வாறான அறிவுரை யைச் செல்வர்கள் நடைமுறைப் படுத்தாவிடில் நேர்வது என்ன என்பதையும் கூறியுள்ளார்.

‘செல்வத்தையும் அந்தச் செல்வம் தருகிற அதிகாரத்தையும் தம்மிச்சையாகப் பொதுநல னுக்குக் கொடுத்துப் பகிர்ந்து கொள்ளாவிடில்