பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நல்லோர் நல்லுரை

பலாத்கார, இரத்தக் களரிப் புரட்சி என்றாவது ஒரு நாள் ஏற்பட்டே தீரும்’ என்பது அவருடைய எச்சரிக்கை.

‘அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நற்பயன்’ என்று கூறியுள்ள வேதநாயகம் பிள்ளை அவர்கள், ‘நல்ல பழங்களைத் தாமே தராமல், வானளாவி உயர்ந்துள்ள மரங்களைக் கல்லாலும் கழியாலும் எறிந்து பழங்களைக் கொள்வதைப் போல, ஏழைகட்கு வழங்காது வாழ்கின்ற செல்வர்களின் பொருள், மிக்க பசியுள்ளவரால் வன்முறை

யால் பறிக்கப்படும்’ என்று தம் நீதி நூலில் கூறி

யுள்ளார். -

“தானற்கனி சிந்தாதுயர் தருவைச்சிலை கழியாமல் ஊனப்பட மோதிப்பழம் உதிர்ப்பாரென வுலகில் தீனர்க்குவ ழங்காதுறை தீயன்பசி யுளரால் மானத்தையி ழந்தேபொருள் வவ்வப்படு வானே’

-நீதிநூல்; கடும்பற்று; 12 பலாத்கார இரத்தக் களரிப் புரட்சி ஏற்பட்டே தீரும் என்ற காந்தியடிகள், அப்புரட்சியை ஆதரிப்பவர் அல்லர். வறுமையை ஒழித்திடும் முயற்சியிலும் அகிம்சையைத் தான் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எவ்வளவோ முயன்று பார்த்தும், பணக்காரர் கள் உண்மையாகவே ஏழைகளின் கார்டியன் களாக மாறாமல், ஏழைகள் மேலும் மேலும் நசுக்கப்பட்டுப் பட்டினி கிடந்து சாக நேரிட் டால் என்ன செய்வது? இந்தப் புதிருக்கு விடை தேட முயலும்போது நான் ஒரு மார்க்கத்தை அறிந்து கொள்ள நேர்ந்தது. அகிம்சா பூர்வ மான ஒத்துழையாமையும் சட்ட மறுப்பும்தான் சரியான தோற்க முடியாத அந்த மார்க்க