பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நல்லோர் நல்லுரை

விலைபெறும் கூலிகளே’ என்று பாடியுள்ளார் ஒரு கவிஞர். இந்திய நாட்டின் விடுதலைக்கு தம்மை அர்ப் பணித்துக் கொண்ட காந்தியடிகள், சுதந்திர இந்தி யாவில் சாதாரன பதவியையும் விரும்பாமல் மக்களுக் காக உழைத்தார். மத இன வேற்றுமைகளைப் போக்கப் பாடுபட்டார். தன்னலமற்ற அத்தகு மேன்மைத் தொண்டின் காரணமாகவே அவர் என்றும் மக்களின் தலைவராக இருக்கின்றார்.

‘ஒரே இலக்கில் வந்து சேர்கின்ற பல்வேறு சாலைகள் தாம் மதங்கள்...ஒரே தண்டைக் கொண்ட மரத்தில் பல கிளைகளும் இலைகளும் இருப்பது போல வே, சத்தியமான, பூரணமான மதம் ஒன்றுதான் என் றாலும் மனிதர்களின் வாயிலாக வெளிவரும்போது அது பலவாகி விடுகிறது’ என்று மதத்தை விளக்கியுள்ளார் காந்தியடிகள். இந்து, முசுலீம், கிறித்தவர் என மக்களை வேறுபடுத்திய குற்றம் மதத்தைத் தானே சாரும் என்பவர் கூற்றை மறுக்கும் காந்தியடிகள், “ஒரு மனிதனை இன்னொருவனிடமிருந்து பிரிப்பதற்காக மதங்கள் ஏற்படவில்லை. மனிதர்களைச் சேர்த்து வைப் பதுதான் அவற்றின் நோக்கம்’ என்று கூறி, மனிதர் களை ஒன்றுபடுத்துவதே மதத்தின் பணி என்று கூறுகிறார்.

‘நம்மைக் கிறித்தவர்கள் என்றோ, இந்துக் கள் என்றோ, முகம்மதியர்கள் என்றோ நாம்ன அழைத்துக் கொள்ளலாம். நாம் எச்சமயத்தி ராக இருந்தாலும், இந்த வேறுபாடுகளின் அடியில் தெள்ளத் தெளிவான ஒருமைப்பாடு இருக்கிறது. பல்வேறு மதங்களுக்கு அடியில் ஒரு பொது மதமும் இருக்கிறது. முகம்மதி