பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணலின் அருட்சிந்தனை 131

யர்கள், கிறித்தவர்கள் அல்லது இந்துக்களாக இருக்கும் நம்மிடையே ஒற்றுமை அம்சங்கள் மிகப்பலவாகவும், வேற்றுமை அம்சங்கள் மிகச் சிலவாகவும் இருப்பதை எப்போதாவது நாம் கண்டு கொள்வோம் என்பது என் அனுபவம் காட்டும் உண்மை’

என்று கூறும் காந்தியடிகள், ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தவரிடம் சகிப்புத்தன்மையைக் காட்டிச் சகோத ரத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். Sl

‘பிற மதங்களின்பால் சகிப்புத்தன்மையை வளர்த் துக் கொள்வது நம்முடைய சொந்த மதத்தினை இன்னும் சரியாகப் புரிந்து கொள்வதற்கு உதவும்’ என்பது அவர் வாக்காகும்.

இந்து சமயத்துள்ளும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என இருக்கும் இனப்பாகுபாட்டினைக் களைந்தெறிய முற் பட்ட காந்தியடிகள்,

‘திண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நான் தொடங்கியிருப்பதன் நோக்கம், தெள்ளத் தெளிவானது. தீண்டத் தகாதவர் ஒருவரை ஒவ்வொரு இந்துவும் தீண்ட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால் தீண்டத் தக்க ஒவ்வொரு இந்துவும் தம்முடைய இரு தயத்திலிருந்து தீ ண் டா ைம யை விரட்ட வேண்டும் என்பதும் பூரணமான மனமாற்றம் பெறவேண்டும் என்பதுவும்தான் என்னுடைய நோக்கம்’

என்று தாம் தொடங்கிய தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தின் நோக்கத்தை எடுத்துக்கூறியுள்ளார்.