பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நல்லோர் நல்லுரை

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ a. என்றார் வான்புகழ் வள்ளுவர். தந்தை காந்தியடிகளும் ‘'உயர்ந்தவர்.தாழ்ந்தவர் என்ற அடை யாளச் சின்னத்துடன் மனிதர்களைக் கடவுள் படைக்க வில்லை, பிறப்புக் காரணமாக ஒர் ஆணையோ பெண்ணையோ தாழ்ந்தவர் அல்லது தீண்டத்தகாதவர் என்று குறிப்பிடும் சாத்திரம் எதற்கும் நாம் கட்டுப்பட முடியாது. இது கடவுளையே மறுப்பதாகும்; கடவுளாக இருக்கும் சத்தியத்தையே மறுப்பதாகும்” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளார்.

எனவே உலக உயிர்கள் அனைத்தும் சமம் என்ற உணர் வோடு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்து பட்ட மனப்பான்மையோடு வாழ்வோமாக.