பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்கிய வாயினர் II

ஒருவர் பேசும் சொல் உறவை வளர்ப்பதற்கும் பயன் படும். உறவை முறிப்பதற்கும் பயன்படும். எனவே ஒருவர் சொல்லும் சொல், துன்பத்தைப் பிறருக்கு விளைத்து விடாமலும் அமையவேண்டும். நுட்பமான பொருள் களைக் கேட்டறிந்தவர்க்கே வணக்கமான சொற்களைப் பேசும் வாய் வாய்க்கும். அந்த அடக்கமே அமரருள் உய்க்கும். எனவே நுட்பமான பொருள்களைக் கேட் டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக இருக்கமுடியாது. இதனையே திருவள்ளுவர்,

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது ’’ -திருக்குறள் : 419

o

என்கிறார்.

o

செவியிற் சுவையுணரா வாயுணவின் மாக்கன் அவியினும் வாழினும் என் ?”

-திருக்குறள் : 420 உடம்பில் அமைந்துள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு கடமையும் பணியும் உண்டு. ஐம்பொறிகளும் அதனதன் பணிகளைத் தட்டுப்பாடின்றிச் செய்யும் பொழுதுதான் ஒருவன் தன் கடமைகளைத் தட்டுப் பாடின்றிச் செய்ய முடியும். ஒர் உறுப்பு, ஒரு புலன் தன் செயலைச் செம்மையாகச் செய்யத் தவறினாலும் அதனால் பெரிதும் இடர்ப்பாடு விளையும். ஒர் உறுப்பு நன்கு இயங்கி, மற்றோர் உறுப்பு தன் பணியினைச் சற்றுத் தளர்த்தினாலும்கூடச் செயல் முழுமை பெறாது.

உலகில் மனிதர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறுதியில் முடிகிறார்கள். ஒரு சிலரே உரையும் பாட்

- # - 4.

-