பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 (BéðGeorro. நல்லுரை

டும் உடையவராய்ப் புகழ் பூத்து நின்று, இறந்தும் இற வாது வாழ்கின்றனர். மறைந்தும் மறையாத இத்தகு மாண்புடையோர் செயற்கரிய செயல்களைத் தங்கள் வாழ் நாளில் செய்தவர்கள் ஆவர்.

‘உயிர் வாழ்வதற்கு உணவு தேவை; எனவே தேவை யான அளவு உணவை மட்டுமே கொள்ள வேண்டும்’ என்று சிலர் வாழ்கிறார்கள். ஆனால் பலர் உண்பதற் காகவே உடம்பெடுத்தவர்கள் போன்று வாழ்கிறார்கள்.

முன்னவர் உயிர்வாழ உணவு கொள்கின்றனர்; பின்னவர்

உணவு உண்ண உயிர் வாழ்கின்றனர்.

ஒவ்வோர் உறுப்புக்கும் உரிய அளவு மதிப்பே தர வேண்டும். ஒவ்வோர் உறுப்பும் அவையவை அமைந் திருக்க வேண்டிய அளவில், அமைப்பில் அமைந்திருந்து செயல்பட்டால்தான் சிறப்பு. அதனை விடுத்து, ஒர் உறுப்பின் இயக்கம் குறைந்து, பிறிதோர் உறுப்பின் செயற்பாடு மிகுந்து விடுமாயின் சிக்கல்கள் தோன்றும்; வாழ்வு சீரழியும்.

வாயால் நுகரப்படும் சுவைகள் கைப்பு, காழ்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறாகும். அறுசுவை உணவு உண்ண வேண்டியதுதான். ஆனால் அளவு இருக்கவேண்டும். அவ்வாறு அளவு அமைந்தால் தான் பிறபிற உறுப்புகளின் பணிகளைத் தவறாது இயக்குவதில் மனித உடலின் நாட்டம் அமையும்.

செவியால் நுகரப்படும் சுவைகள் இரண்டாகும். அவை சொற்சுவை பொருட்சுவை என்பனவாம். சொற்சுவை குணம், அலங்காரம் என்று இரண்டாகக் கூறப்பெறும். பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், வெகுளி, அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைப்