பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்கிய வாயினர் 13

படும். இதைத் தமிழ் நூலார் ஒன்பான் சுவை என வழங்குவர். செவிக்குக் குணம் அலங்காரம் என்னும் சுவைகளோடு, இந்த ஒன்பது சுவைகளையும் தரும் இலக்கியச் சுவை, கலைச்சுவை வேண்டற்பாலது.

எனவே செவியால் கேள்விச் சுவையினை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந் தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன? என்று திருவள்ளுவர் சாடுகின்றார். திருவள்ளுவர் பெருமான் இவ்வாறு சாடும் இடங்கள் சிலவே. இதனாற் பெறப் படுவது, வாய்ச்சுவையினை மட்டும் வகையுற வளர்த்து விட்டு, கேள்விச் சுவை பெறாத செவியர்களாய் வாழ்வதை காட்டிலும் வாழாமல் இறந்துவிடுவது நல்லது என்பதாம். ஏனெனில் வாயுணர்வை வளர்த்துச் செவி யுணர்வை வளர்க்காதவன் வாழ்வதால் உலகிற்கு ஒரு பயனும், இறந்துவிடுவதால் உலகிற்கு ஒர் இழப்பும் இல்லை என்பதாம். இதனையே திருவள்ளுவர்,

  • ” செவியிற் செவியுணரா வாயுணவின் மாக்கள்

அவியினும் வாழினும் என் ‘

-திருக்குறள் : 420 என்னும் குறட்பாவில் குறிப்பிடுகின்றார்.