பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இன்புறும் இன்சொல்

1

“ துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறுஉம் இன்சொ லவர்க்கு “ -திருக்குறள் , 94

என்பது குறளமுதப்பா.

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் அறிவிற் சிறந்த ஒளவையார். மனிதப் பிறவியும் வேண்டு வதே இம்மாநிலத்தே என்றார் அப்பர் பெருமான். பெறுதற்கரிய மனிதப் பிறவியினும் கூன் குருடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்பர். மனிதப்பிறவியின் பெருஞ் சிறப்பு, பேசுதற்கு நா படைத்ததாகும். மனித உள்ளத் தில் உருக்கொள்ளும் எண்ணங்களை வெளியிடுவதற்கு வாய்த்த நல்ல கருவி நாவேயாகும் மற்றவர் மனங் கொளப் பேசுதற்குச் சொற்கள் சீரியனவாயிருக்க வேண்டும். தங்கள் உள்ளக் கருத்துக்களைப் பிறருக்குப் பொருத்தமாக எடுத்துச் சொல்ல முடியாதவர்கள் மலர்ந்தும் மணம் பரப்பாத மலர்களுக்கு ஒப்பாவர். மலர்ந்தும் மணம் பரப்பாத மலர்களை மங்கையர் விரும்புதல் இல்லை. இதுபோன்றே பிறர் மனங்கொளச் சொல்ல முடியாத சொற்களை அறிஞர் ஒலிக்கூட்டங் களாகக் கொள்வரே யல்லாமல், கருத்து நிறைந்த சொற்

கூட்டமாகக் கருதுவதில்லை.