பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்புறும் இன்சொல் I5

சொற்கள் இரு திறத்தன. நன்மை பயக்கும் சொற் கள் ஒரு வகை, தீமை விளைவிக்கும் சொற்கள் பிறிதொரு வகை. நாக்கு எந்தச் சொல்லையும் பேசும் தன்மை யுடையது. நாக்கைப் பெற்றிருக்கும் மனிதன் நன்மை தரும் சொல்லையே நாடிச் சொல்ல வேண்டும். தீமை பயக்கும் சொற்கள் கேட்போருக்குத் தீமை விளைவிப்ப தோடு சொல்லுவோர்க்கும் இறுதியில் தீமையே

விளைவிப்பதைக் காணலாம்.

வாழ்க்கையில் நாம் மூவகையினரைச் சந்திக்கிறோம். நமக்கு நட்பாவார் ஒருவகை; நமக்குப் பகையாவார் பிறிதொரு வகை; நட்பும் இன்றிப் பகையுமின்றி அயலா ராக, நொதுமலாளராக நிற்பவர் மூன்றாம் வகையினர் ஆவர். இம் முத்திறத்தார் மாட்டும் இன்சொல்லே கூற வேண்டும். எவன் ஒருவன் எல்லோரிடத்தும் இன் சொல்லே கூறி அவர்கள் மனத்தை மகிழச் செய்கிறானோ அவன் பிறரால் ஒருநாளும் துன்பப்பட மாட்டான். ஏனெனில் அவன் கூறும் இன்சொல் பிறரை மகிழ்விக்கின்ற காரணத்தால் அவன் சொல்லைக் கேட்கின்ற பிறரும் அவனை விரும்பி நேசிக்கத் தலைப்படுகின்றனர். தான் ஒருவன் பிறரிடத்து இனிய சொற்களையே பேசி அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் தன்னை விரும்பும்படிச் செய்துவிடுவதால் அவனுக்கு உலகில் யாராலும் துன்பமின்றி இன்பமே வந்தெய்துகின்றது. பலரும் அவனுக்கு உதவ விரைந்து வருகின்றனர். அதனால் வாழ்க்கையில் துன்பத்தைச் செய்யக் கூடிய வறுமை, யாரிடத்தும் இன்சொல் பேசுகின்றவனை அணுகு வதில்லை. -

கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பர். அதிலும் இளமை வறுமை கொடிது’ என்பர். வறுமை என்பது, போகந் துய்க்கப் பெறாத பற்றுள்ளம்’ என்பர்