பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 நல்லோர் நல்லுரை

பழைய உரையாசிரியர் பேராசிரியர். ெ நருப்பினுள் படுத்து உறங்கினாலும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்து வாட்ட ஒட்டிய வயிறோடு உறங்குதல் முடியாது’ என்பர் திருவள்ளுவர். எனவே கொடிய வறுமையை விரட்டி ஒட்ட வேண்டுமென்றால் ஒருவன் எல்லோரையும் இன்சொல் கூறி மகிழச் செய்யவேண்டும். இதைத் தான் தவயோகியாம் திருமூலரும் யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தாமே என்கிறார்.

எனவே, நம்மைச் சுற்றியுள்ள நட்பு, பகை, அயலார் என்கிற முத்திறத்தினரும் நம்மை விரும்பி நேசிக்க நாம் இனிமை பயக்கும் இன்சொற்களையே கூறி அவர்கள் இதயத்தை மகிழச் செய்யவேண்டும்; அவ்வாறு இன் சொல் இனிதீன்றால் வறுமை வந்து சேராது’ என்கிறார் திருவள்ளுவர்.

“ துன்புறு உம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறுஉம் இன்சொ லவர்க்கு -திருக்குறள் : 94

2

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற ’’ -திருக்குறள் : 95

என்பது குறட்பா.

வஞ்சனையற்ற அன்பு கலந்து மெய்ப்பொருள் உணர்ந்தவர்களின் வாயிற் பிறக்கும் சொற்கள் இன்சொற் களாகும். யாவரிடத்தும் இன்சொல் பேசுபவன் எல்லோ ராலும் நேசிக்கப்படுவான் என்பது தெளிவு. இது மட்டும் அன்று: பணிவுடையவனாகவும் இன்சொல் பேசு