பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்புறும் இன்சொல் 17

பவனாகவும் ஒருசேர ஒருவன் விளங்குவதே ஒருவனுக்கு உண்மையான அணிகலமாகும்.

அழகு நாட்ட மென்பது உலகிற் காணப்படும் உயிர் களின் இயற்கை உணர்வாகும். இறைவன் படைப்பில் அழகு, விண்ணிலும் மண்ணிலும் நீரிலும் வெளியிலும் விந்தை செய்கின்றது. இறைவன் படைப்பில் எப்படி யிருப்பினும் ஒவ்வோர் உயிர்களும் தம்மை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றே அவாவுகின்றன. எனவே தம்மைப் புனைந்து கொண்டு செயற்கைப் பொலிவோடாக வாவது திகழவேண்டும் என்று நினைக்கின்றன.

பிற அஃறிணையுயிர்களுக்கே அழகு நாட்டம் மிகுதி யென்றால் மனிதவுயிர்களுக்கு அந்நாட்டம் இன்னும் சற்று மிகுதி என்பது தெளிவு. எனவே பஞ்சாலும் பட்டாலும் நெய்யப்பெற்ற நேர்த்தியான உடைகளையுடுத்து, பொன் னாலும் மணியாலும் ஆன அணிகலன்களை அணிந்து பகட்டாக நிற்கும்பொழுது பலரின் நெஞ்சு நிமிர்வதைக் காணலாம். இதனையே ‘விரகரிருவர் புகழ வேண்டும்; விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும்; இடுப்பில் பஞ்சேனும் பட்டேனும் உடையாக அமைய வேண்டும்’ என்றார் இடைக்கால ஒளவையார். பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்றால் ஆடையும் அணிகலன்களும் அவசியம் வேண்டும் என்றார்.

ஆனால் இவையெல்லாம் புற அணிகளாகும். புறக் கோலத்தை இவ்வணிகள் ஆக்கி நிற்குமேயொழிய அகவ ழகை-உள்ளத்து உண்மையழகை இவை புலப்படுத்தா. பிறர் மனத்தினை மகிழச் செய்யும் அணிகள் இரண்டுள. ஒன்று பணிவுடைமை; பிறிதொன்று இன்சொல் வழங்குவது.