பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நல்லோர் நல்லுரை

“தாழ்ந்து நிற்பர் வாழ்ந்து நிற்பர்” என்பது நம் நாட்டுப் பழமொழி. பணிவுடைமை என்னும் அதிகாரத் தில் எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றார் திருவள்ளுவர். செல்வர்க்கு மேலும் செல்வம் சேரத் துணை செய்வது பணிவுடைமையே ஆகும் என்றார். எனவே பிறர் நம்மை விரும்ப நாம் முதற்கண் நம் மனத்தில் செருக் கினைக் கெள்ளாமல் இருக்கவேண்டும். பிறர் நம்மேல் நல்லெண்ணம் கொள்ள அவரிடம் நாம் பணிந்து போக வேண்டும். அடுத்து, கேட்கும் பிறரையும் தன்னையும் ஒருங்கே மகிழச் செய்யும் இன்சொல்லினையே யாவரிடத் தும் பேச வேண்டும். பணிவு என்பது அகவழகு; இன்சொல் கூறுதல் என்பது புறவழகு, எனவே, மதிப்பு வர வேண்டும் என்று அணியும் ஆடையும் அணிகலன்களும், ஒருவன் பணிந்த போக்கும் இனிய சொல்லும் கொண்டிராதபோது அணிகளாக அமையா. எல்லோரிடத்தும் பணிந்துபோகும் பண்பும், யாவரிடத்தும் இன்சொல்லே கூறி நிற்கும் மாட்சியும்தாம் ஒருவனுக்கு உண்மையான அணிகலன்களாகும். மற்றவர் ஒருவனை மதிக்கக் காரணமாய் இருப்பன அவன் பிறர்மாட்டுக் காட்டும் பணிவுடைமையும், இன்சொல் பகரும் திறமுமே யாகும் என்பர் திருவள்ளுவர்.

எனவே ஒருவனுக்கு அழகு செய்யும் உண்மையான அணிகலன்கள் பணிவும் இன்சொல்லுமே யாகும். பஞ்சாலும் பட்டாலும் பொன்னாலும் மணியாலும் அமைந்த ஆடைகளும், அணிகலன்களும் உண்மையில் அணிகளாகா.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி, அல்ல மற்றுப் பிற ‘ -

-திருக்குறள் : 95