பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்புறும் இன்சொல் 19

3

“ அல்லவை தேய அறம்பெருகும் கல்லவை

நாடி இனிய சொலின் ‘ -திருக்குறள் : 96

என்பது திருவள்ளுவர் வழங்கிய தேனமுதம்.

உலகம் பல்வேறு பண்புகளைத் தன்னகத்தே கொண் டது. ஒளியும் இருளும் கலந்தது; இன்பமும் துன்பமும் கலந்தது; மேடும் பள்ளமும் நிறைந்தது.

இதுபோன்றே பேசும் சொற்களில் நல்லவை உண்டு. தீயவையும் உண்டு. ஒலிக்கூட்டமாய் நின்று எழுத்துகளால் ஆகிய சொற்கள் பொருளைப் புலப்படுத்துகின்றன. இச் சொற்கள் இனிமை தருவதுமுண்டு; இன்னாமை தரு வதும் உண்டு. எல்லாம் ஒருவர் பயன் படுத்தும் சொற் களில் அமைந்துள்ளது. -

நல்ல சொற்கள் கடுமையாக இருத்தலும் இயற்கை, தீய சொற்கள் செவிக்கு இனிமையாக இருப்பதும் உண்டு. ஆனால் ஒருவர் பேசும் சொற்கள் நன்மையையும் விளை விக்கவேண்டும்; அதே நேரத்தில் இனிமையான சொற்க ளாகவும் அமையவேண்டும். எனவே நன்மை தரும் நல்ல சொற்களையே தேர்ந்து, இனிமை பயக்கும் இனிய சொற் களையே எல்லோரிடத்திலும் சொல்லி வரவேண்டும். அவ்வாறு ஒருவன் பிறருக்கு நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து உணர்ந்து இனிமை ததும்பப் பிறரிடம் சொல்ல வல்லானாயின், அவன் செய்த பாவங்கள் நாளும் தேய்ந்து, அறம் பெருகத் தலைப்படும்.

இன்சொல், வன்சொல் என இருவகைச் சொற்கள் உண்டு. இன்சொல்லே பிறர் மனத்தை மகிழச் செய்வது; மகிழச் செய்யும் இன் சொல் நன்மை பயக்கும் நற்சொல்