பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - நல்லோர் நல்லுரை

லாகவும் இருந்துவிட்டால், இதுவரை உண்டாகிய பாவங் கள் குறைந்து இனி அறம் பெருகத் தலைப்படும் என்பதாம்.

இருளை ஒட்டுவது ஒளி: அதுபோன்று பாவத்தைத் தேய்ப்பது அறமாகும். அறம் நிறையப் பெருகப் பெருக ஒருவன் புகழ் மேன்மேலும் உயர்ந்தோங்கக் காணலாம். இவ்வாறு பாவந்தேய்ந்து, அறம் பெருகி, புகழோங்கக் காரணமாயிருப்பது இனியவை கூறல்” என்னும் இனிய பண்பேயாகும்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போன்று, வாழ்க்கையில் இரு கூறுகள் உண்டு; சொற் களில் இரு கூறுகள் உண்டு. சொற்கள் விளைக்கும் பயன் களும் இரு திறத்தனவாகும்.

இவ்வுலகம் அல்லவையும் நல்லவையும் கலந்தது. நல்லோர் அல்லவை செய்யார்; அல்லோர் நல்லவை நாடார். ஆனால் நல்ல சொற்களத்ை தேர்ந்து, பிறர் மனம் உவக்கும்வண்ணம் இனிமையான முறையில் நன்மை பயக்கும் நல்ல முறையில் ஒருவன் பேசுவாளானால் அவன் வாழ்வில் அன்றே பாவங்கள் தேய்ந்து அறம் வளரத் தலைப்படும். அதனால் நாளுக்கு நாள் அவன் புகழும் பெருகும்.

இதனையே திருவள்ளுவர்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் ‘ -திருக்குறள் : 96

என்று குறிப்பிடுகின்றார்.