பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வீறெய்தும் வினையாண்மை

1

  • மனையாளை அஞ்சும் மறுமை யிலாளன்

வினையாண்மை வீறெய்தல் இன்று” -திருக்குறள்: 904

‘ உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு ‘

என்று மாங்குடி மருதனார் என்னும் மாண்பமை புலவர், ‘திருந்திய தமிழில் தெய்வப் புலமை அருந்திறல் வள்ளுவன், ஆய்ந்துதன் வாக்கால் அறம் பொருள் இன்பம் வீடான நான்கின் திறந்தெரிந்துரைத்துச் செப்பிய முப்பாலாம் திருக்குறளைப் பாராட்டிப் போந்தார். எக் காலத்திற்கும் இயைந்த வாழ்வியற் கருத்துகளை வகையுற மொழிந்து சென்றவர் தெய்வப்புலவர் என நாம் தெளி வுறப் பாராட்டும் திருவள்ளுவர். -

வாழ்க்கையில் ஒரு மனிதன் வெல்ல வேண்டியன அகப்பகை புறப்பகை என இரண்டாம். புறப்பகை கண்ணுக்குக் கண் காணக்கூடியது; ஆயின் அகப்பகை அவ்வாறன்று. அது மனத்தை மயக்கி மருட்டி உருட்டி அதன்வழி மனத்தைப் பாழ்படுத்தி நிற்பதாகும். எனவே புறப்பகையினும் அகப்பகை அடிக்கடி தீமை விளைவிக்கக் கூடியதாகும். இத்தகைய அகப்பகைகளில் ஒன்று காம

6 سس . rدة