பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்லோர் நல்லுரை

மாகும். கையிகந்த காமம் நேரே பகையாகக் கொள்ளத் தக்கது அன்றேனும் ஆக்கஞ் சிதைத்தல், அழிவுதலைத் தருதல் ஆகிய தொழிற் காரணங்களால் பகையோடு ஒத்து நிற்றலின் பகையின்பாற் படுவதாகும்.

பெரியாரை- ஆற்றலாற் பெரியரான வேந்தரை தவத்தாற் பெரியரான முனிவரை அவமதித்து ஒழுக லாகாத தன்மையினைப் பெரியாரைப் பிழையாமை’ என்னும் அதிகாரத்தில் வற்புறுத்திய வள்ளுவர் பெருந் தகை, அதனையடுத்துப் பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தைப் படை த்துள்ளார்.

பெண்வழிச் சேறலாவது யாது? ‘தன்வழி ஒழுகற் பாலளாய இல்லாள் வழியே தான் ஒழுகுதல்” என்பர் பரிமேலழகர் மணக்குடவரோ பெண்வழிச் சேறலாவது, இன்பம் காரணமாக மனையாள் வழி ஒழுகுதல்” என்பர். பரிதியார் மனையாள் வார்த்தை கேட்டலையே பெண் வழிச் சேறல் என்று கருதுவர்.

ஆண் பெண் என்றமைந்த சமுதாயத்தில் அவ் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடமைகள் உண்டு. ஆண் பெரும்பாலும் வீட்டின் புறத்தே ஆற்றத்தக்க செயல்கள் பலவாகும்; பெண்ணோ வீட்டிலிருந்து ஆற்றும் கடமை களே மிகுதியாகும். இந்த வகையில் கடமையே ஆணின்கணவனின் உயிர்நிலையாக அமைகிறது: கணவனே மனைவி யின் உயிராக ஒளிர்கிறான்.

வினையே ஆடவர்க் குயிரே வாள்துதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் ‘

அன்று நல்ல குறுந்தொகை நலமுற - நயமும் நவிலும்.