பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீறெய்தும் வினையாண்மை 23

ஒர் ஆனுக்குக் குடும்பக் கடமையும் உண்டு; உலகக் கடமையும் உண்டு; குடும்பக் கடமையையும் குறைவற முடித்து, உலகக் கடமையையும் நன்கு செய்ய வல்லவர் சிலர். இத்தகையோர் வாழ்க்கை, போற்றத்தக்க வாழ்க்கை. ஆனல் சிலருடைய வாழ்க்கையில் குடும்பக் கடமைக்கும் உலகக் கடமைக்கும் இடையே போராட்டம் ஏற்படுகின்றபொழுது, குடும்பக் கடமையைப் போற்றி, உலகக் கடமைகளை ஒதுக்கி விடுவார்கள். இவர்களால் பொது வாழ்க்கைக்குத் தீங்கு நேரும். இவ்வாறு உலக வாழ்க்கைக்கு-பொதுவாழ்க்கைக்கு இ ைட யூ ற க ஒருவன் நடந்து கொள்வதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், அதற்குக் காரணம் அவனுக்கு வாய்த்த மனைவியின் போக்கு காரணமாகலாம். அவள் மாட்டுக் கொண்ட அளவிறந்த காமத்தின் காரணமாக, அவள் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப் பளித்துத் தன்னலப் பற்று மிகுந்து, தான் ஆற்ற வேண்டிய கடமைகளைத் துறந்து விடுகின்றான். தனக்கு வாய்த்த மனையாளுக்கு அஞ்சி அடங்கி ஒடுங்குகின்ற காரணத்தால் அவன்தன் பொதுக் கடமைகள் தடைப் பட்டதனோடு, அடுத்து அவன் இல்லறக் கடமைகளும் இனிதே நடைபெற இயலாமற் போகின்றன. எனவே அவனுக்கு மறுமைப் பயன் கிடைக்காமற் போகின்றது. மேலும் அவனுக்குச் செயலில் சிறக்கும் செம்மாந்த உள்ளம் இருப்பினும்கூட, அவனைப் பெரியோர் போற்ற மாட்டார்கள்; மாருக இகழ்வர் தன் வழியே மனைவி யைத் திருத்திக் கொணர முடியாமல், அவள் வழியே தான் சென்றுவிடுகின்ற காரணத்தால் இம்மைப் பயனும் புகழும் அவனுக்கு வாய்க்காமற் போய்விடுகின்றது. இவ் விரு நிலைகளையும் உள்ளடக்கியேதான் திருவள்ளுவர், * மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத