பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நல்லோர் நல்லுரை

ஒருவன், செயலாற்றுந் தன்மை பெருமைபெற்று விளங்க முடிவதில்லை’ என்ற கருத்து விளங்க,

  • மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று ‘

-திருக்குறள் : 904 என்று குறிப்பிட்டுள்ளார்.

2

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் ’’

-திருக்குறள் : 905

இல்லறத்தை ஆள்பவள் மனைவி. எனவே இல்லாள்” என்ற அழகிய சொல் அவளைக் குறிக்க எழுந்தது. இச் சொல்லிற்கு எதிர்ச்சொல் இன்று. இல்லான்’ எனில் வறியவன் எனப் பொருள்பட்டு நிற்கும். அறத்துப்பாலில் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தில் பெண்ணின் பெருஞ்சிறப்புகளை நாவார மனமாரப் போற்றியுரைத்தார். மனைத்தக்க மாண்புடை யாள், மனைவி என்றார், வளத்தக்க வாழ்க்கை நடத்து பவள், வாழ்க்கைத் துணை என்றார். ‘பெண்ணிற் பெருந் தக்க யாவுள; கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்? என்றார். கற்பென்பதற்கும் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. கல்போன்ற திண்மை நிலை உடைய வளாயிருத்தல்’ என்பர் சிலர். ‘கணவன் கற்பித்த வழியிலே நடத்தல்’ என்றும் ஒருசிலர் கூறுவர். எனவே கணவன் காட்டிய வழியில், அறிவுறுத்திய நெறியில் கற்புடை மனைவி ஒழுகுவாள் என்பது பெறப்படுகின்றது. எனவேதான்,