பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நல்லோர் நல்லுரை

விடுமாயின், அது அவன் பொதுவாழ்க்கைக் கடமைக்கு இடையூறாக அமைந்து கெடுக்கின்றது.”

திருவள்ளுவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்த உரிமை நல்கும் சான்றோர் என்பதையும் இங்கு மறத்தல் கூடாது’. ‘ஆணுக்குப் பெண் அடங்கும் பெண்ணடிமைத் தன்மை, குடும்ப முன்னேற்றத்தைக் குலைக்க வல்லது: அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அடங்கி நடக்கும் ஆணடிமைத் தன்மையும் பொது வாழ்க்கையைக் கெடுக்க வல்லது’ என்பர் அமரர் மு. வ. எனவேதான் தன் பொது வாழ்வுக் கடமையினை மனைவியின் சீற்றத்திற்கு அஞ்சித் துறக்கும் இயல்புடைய ஆணினையே இங்குப் பேசுகின்றார். இவ்வாறு இல்லாளை அஞ்சும் இயல்புடையவன், தானே தேடிய பொருளையும் தக்கார்க்கு - தகுதியுடைய நல்லன செய்தலை ஆற்றாது எப்பொழுதும் அஞ்சியே நிற்பான்.

நல்லவர்கள் யார்? தேவர், அருந்தவர், சான்றோர், இதுமுதுகுரவர் என்பர் பரிமேலழகர். இல்லாளை அஞ்சும் இயல்பினனுக்குக் கடவுளைப் போற்றுதலும், கடவுள் மாட்டுக் காதல் கொண்டு உலகியல் வாழ்வினை உதறித் தள்ளிய தவஞானிகளைப் போற்றுதலும், சான்றாண்மைக்கு ஆழி என விளங்கும் சான்றோர்களைப் போற்றுதலும், தாய் தந்தையராய இரு முதுகுரவர்க்கு ஆற்ற வேண்டிய கடமையினைப் போற்றுதலும் இயலா என்கின்றார்.

அறிவிற் சிறந்த ஒளவைபிராட்டி ஒருருக்குச் சென்றார். அவர் வழி நடந்து வந்த வருத்தத்தினைக் கண்ட ஒருவன், ஒளவையாரை உபசரிக்க ஒருப்பட்டான். அப்பெருமாட்டியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று திண்ணையில் அமர வைத்துவிட்டு உள்ளே சென்று, தன்