பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீறெய்தும் வினையாண்மை 27

மனைவியை முகந்திருத்தி மகிழ்ச்சிப்படுத்தி, அவள் தலையில் பேன் பார்த்துப் பின்னர் விருந்து வந்தது என்று மெல்லச் சொல்ல. அவள் அவனை அடித்துச் சாடிப் படாதபாடு படுத்தினாள் என்று தனிப்பாடல் திரட்டிலே ஒரு கதை உண்டு.

எனவே திருவள்ளுவர் ‘மனைவிக்கு அஞ்சி வாழ் கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமை யைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்’ என்ற கருத்தமைய,

‘இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்’ -திருக்குறள் : 905

என்ற குறட்பாவினை உரைத்துள்ளார்.

3

‘இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்’

-திருக்குறள்: 906.

எண்ணற்ற உயிரினங்கள் இவ்வுலகில் வாழ்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கும் நோக்கும் கொண்டு வாழ்கின்றன. மனிதர்களும் இப்படித்தான். ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஊன்றி ஆராய்ந்து பார்த்தால் இவ் வுண்மை விளங்கும். இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று வாழ்பவர் ஒருவகை; எப்படியும் வாழலாம்’ என்று கருதி வாழ்கின்றவர் பிறிதொரு வகை. முன்னபடி வாழ்பவர் சிலர்; பின்னதன் வண்ணம் வாழ்வோர் பலர். முன்னைய வாழ்க்கை வரப்பும் வேலியும் அமைந்த நிலம் போன்றது; பின்னது கங்கு கரையற்ற, தங்கு தடையற்ற