பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நல்லோர் 5:31

கர்ட்டாற்று வெள்ளம் போன்றது. முன்னதில் நெறி யினைக் காணலாம்; பின்னதில் வெறியினை நோக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்பர். மனம் போனபடி வாழ்தல் வாழ்வாகாது. மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பிரித்தெண்ணப்படுவது, அவனுக்கு அமைந் துள்ள சிந்தனை செய்யும் திறத்தாலேயாம். சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன், சிந்தனையே அருளுக்குக் காரண மாகிறது; பகுத்தறிவிற்கு இடமாகிறது. சிந்திக்கச் சிந்திக்க மனிதன் உயர்கிறான். உயர்நிலை வாழ்வினை நம் முன்னோர் அமர வாழ்வு’ என்றனர். உயரிய குறிக் கோளுடைய வாழ்வினை ‘அமர வாழ்வு’ Кат"Клуг அகமகிழ்ந்து போற்றினர்.

பழங்காலத்தில் காதற் பண்பும் வீரப் பண்பும் சிறப் பாகப் போற்றப்பட்டன. போர்க்களத்தில் தோள்வீரமும் வாள்வீரமும் காட்டி நின்ற பகைவரை வென்று வெற்றி வாகை குடுதல் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டது. அவ்வாறு விண்ணும் மண்ணும் அதிர வெறியாட்டமாடி வரும் விரோதிக் கூட்டத்தை வென்ற வீரனையும் வேல் விழியால், தோள் நலத்தால் வென்ற சேயிழையர் பலர். பகைவர் தோள்களை அஞ்சாது வென்ற வீரன், தன் வீட்டில் தன் மனைவியின் வேய் போலும், மூங்கில் போலும் தோளினையே தழுவிக் கிடந்து, தான் ஆற்ற வேண்டிய பொதுக்கடமைகளை மறந்து, துறந்து நிற்பானேயானால் அவனை ஒருவரும் போற்ற மாட்டார் கள்.

சச்சந்தன், காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமு கின் எற்றிப் பூமாண்ட தேன் வருக்கை கீறும்...ஏமாங்கதம் எனும் இசையால் திசைபோகிய நல்வளஞ் செறிந்த நாட்டின் மன்னன். ஆனாலும் அவன் ஆற்றவேண்டிய