பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீறெய்தும் வினையாண்மை 29

கடமைகளை அறவே மறந்து, மனைவி விசயை வாழும் அந்தப்புரத்திலேயே கழித்தான். பெருவீரனானாலும் கடமையினை மறந்து, மனைவியின் தோளினைச் சேர்ந்து வாழும்வாழ்வே பெருவாழ்வு எனக் கருதிக் காலம் கழித் தான். அவன் கையிகந்த கழிமிகு காமம், இறுதியில் அவன் வாழ்விற்கே இறுதியாய் அமைந்தது. தக்க வாய்ப் பினை நோக்கியிருந்த அவன் அமைச்சன் கட்டியங்காரன், அவனை வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். எனவே கடமையை மறந்த காதற்கேண்மையும் கடியப்பட வேண்டும் என்பதனைச் சிந்தாமணி செப்பி நிற்கிறது.

மற்றோர் எடுத்துக்காட்டும் காணலாம். தசரதன் பூரியர் வீரம் விளங்கிநின்ற வேந்தன். போர்க்களங்கள் பலவற்றைத் தனதாக்கிக் கொண்ட தறுகண்மை வாய்ந் தவன். சம்பராசுரப் போரில் வெற்றிவாகை சூடிய திற லோன். இவ்வாறிருந்தும் அவன் கைகேயி மாட்டுக் கழி பெருங் கேண்மைக் காமம் கொண்டு நின்றான். அவன் நெஞ்சிலும் நினைவிலும் கைகேயி நிறைந் திருந்தாள். மானை யெடுக்கும் மா ேன போ ல்’ அவளைத் தழுவிக் கிடந்து நாள் பல கழித்தான். யார்மேல் உயிரனைய காதல் கொண்டிருந்தானோ, அவளே மரந் தான் எனும் மனத்தளாகவும், உயிருண்ணுங் கொடுங் கூற்றாகவும் ஆனாள். எனவேதான் அவன்,

‘விண்ணோர்காறும் வென்ற எனக்கோர்என்

மனைவாழும் பெண்ணால் வந்தது அந்தரம்”

என்று மனம்மாழ்கித் தவித்தான். ‘எந்தப் பொருள்மேல் நாம் அளவுகடந்த ஆசை வைத்திருக்கிறோமோ, அந்தப் பொருளாலேயே அளவற்ற துன்பம் வருதல் இயற்கை.” எனவேதான் திருவள்ளுவர் பிறிதோரிடத்தில்,