பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நல்லோர் நல்லுரை

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்’ -திருக்குறள் : 314

என்றார். -

எனவேதான் வீரத்தோள்கள் பலவற்றை வென்று ‘அமரர்’ என மதிக்கத் தக்கவராயினும் மனைவி தோள் இரண்டனை வென்று வாழும் ஆற்றல் அற்று, அஞ்சி வாழ்வாரேயானால் அவரை எவரும் மதிக்க மாட்டார் கள்; பெருமையும் தரமாட்டார்கள் என்ற கருத்தில்,

‘இமையாரினும் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்’ -திருக்குறள் : 506

என்று செந்நாப்போதார் திருவள்ளுவர் செப்பிப்போ ந் தார்.