பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கனவிலும் தேற்றாதார்

1

‘இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.”

-திருக்குறள் ; 1054 உலகில் என்றும் மாறாமல் சில செயல்கள் நடை பெற்று வருகின்றன. கதிரவன் வைகறையில் கீழ்த்திசை யில் உதிப்பதும், மாலையில் மேற்திசையில் மறைவதும் என்றும் நடைபெற்றுவரும் செயல்களாகும். கதிரவன் வானத்தில் நின்று ஒளி வெள்ளம் பாய்ச்சும் காலத்தினைப் பகல் என்றும், அவன் மாலையில் மேற்கே மறைந்த பின்னர் இருள் கவிந்ததும் திங்கள் தோன்றி ஒளி விளக்கம் தருகின்ற காலத்தை இரவு’ என்றும் குறிப்பிடு கின்றோம். பகலும் இரவும் உலகின் நடைமுறை இயற்கை களாகும்.

இது பேன்றே சமுதாயத்தில் உடையாரும் இல்லா ரும் ஒருங்கே வாழக் காண்கிறோம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்றார் திருவள்ளுவர். உயிர் வாழ்வ தற்குக் காற்றும் ஒளியும் நீரும் உணவும் உடை யும் ஒருங்கே தேவைப்படுகின்றன. இறைவன் படைப் பில் காற்றும் ஒளியும் நீரும் இயல்பாகக் கிடைக் கின்றன. உணவும் உடையும் எல்லோர்க்கும் எளிதில்