பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நல்லோர் நல்லுரை

இயைந்து விடுவதில்லை. அதிலும் உயிர்வாழ்க்கைக்கு உதவும் உணவு ஒரு சிலர்க்கு எளிதாக வாய்த்து விடுவதோ டன்றி, அவர்களிடம் தேவைக்கு மேல் சில சமயங்களில் குவிந்து விடுவதனையும் காணலாம். உழைப்பு உணவைப் பெறுவதற்குரிய பொருளை-பணத்தை நல்கும் திறம் சான்றது என்றாலுங்கூட, சில நேரங்களில் சிலருக்கு, ஏன் பலருக்குங்கூட உழைப்பைப் பயன்படுத்திப் பொரு ளிட்டும் வாய்ப்டே கிட்டாமற் போவதும் உண்டு. அந்நிலையில் ஏற்படும்போது நல்குரவு-வறுமை அவர் கள் வாழ்க்கையில் தாண்டவமாடத் தொடங்குகின்றது. எனவே உடையாரிடம் சென்று, பொருள் உடையாரிடம் சென்று இரந்து உயிர் வாழவேண்டிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். அது பொழுது உடை யார் மனம் உவந்து, இரப்போர்பால் இரங்கி உதவி செய் வார்களாயின், வறியவர் வாழ்வு வளம்பெறும்; வாழ்வு பெறும்; ஒளி பெறும்; உயிர்பெறும். இன்றேல் இரப் போர்க்கு இரண்டு வழிகளே உள. ஒன்று அந்த இரப்போர் பொல்லாதவர்களாகித் தாம் உயிர் வாழத் திருடு, கொலை, கொள்ளை முதலான கொடிய தொழில்களில் ஈடுபட்டுச் சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத் துவர்; இன்றேல் உயிர் துறக்க நேரிடும் என்பர் அமரர் மு. வ. அவர்கள்.

இந்த இரண்டும் நல்லனவல்ல என்கின்ற காரணத் தால் திருவள்ளுவர் பெருமான் இரவு என்ற தலைப்பில் சில அருங் கருத்துகளைச் சமுதாய வாழ்விற்கு நலஞ் சேர்க்க மொழிகின்றார்.

‘கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு, இரத்தலும் ஈதலே போலும் என்கிறார் வள்ளுவர். அதாவது, தம் மிடத்தில் உள்ள பொருளை மறைத்துக் கூறும் இயல் பைக் கனவிலும் அறியாத செல்வடரித்தில் இரந்து