பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவிலும் தேற்றாதார் 33

கேட்பதும், பிறருக்குத் தாம் வழங்குவதே போன்ற சிறப் புடைய செயலாகும் என்கிறார் அவர்.

ஈண்டு, இழிந்த பண்பாக நாம் இயல்பில் கருதும் இரத்தலும், உயர்ந்த பண்பாகப் போற்றப்படும் ஈதலும் வள்ளுவரால் ஒருங்கு வைத்து எண்ணப்படுவதனைக்

J5IT GUTTG)IT* LI).

இதன் நயத்தினை, உண்மையினை இனிக் காண் போம்.

“அறிவின் முதற் பாடம் செல்வத்தை வெறுப்பது: அன்பின் முதற் பாடம் செல்வத்தை அனைவருக்குமாகச் செய்வது” என்றார் இரஸ்கின் என்னும் பெருமகனார்.

தம்மிடம் ஒன்று இருந்து, இல்லை என்று வந்து கேட்டவர்க்கு இல்லை என்று சொல்லாத இயல்புடை யோர், இரக்கமும் உள்ளக் கசிவும் உடைய உடையார்’ ஆவர். அதிலும் நனவிலன்றிக் கனவிலும் தம்மிடம் வந்து கேட்டவர்க்கு இல்லை’ என்று கூறாத இயல்புடை யோரிடம் சென்று ‘ஒன்று இரந்து நிற்பதும், ஈதலே போன்ற, இரப்பவரும் பிறருக்கு வழங்குவதே போன்ற சிறப்புடைய செயலாகும்.

தம்மிடம் உள்ளதை இரப்போர்க்கு மறைக்காதோ ரிடம் இரத்தல் ஈதல் போன்ற செயலேயாகும் என்று திருவள்ளுவர் கூறுவதனால் இரண்டு உண்மைகள் பளிச் சிடக் காணலாம்.

ஒன்று, கனவிலும் தம்மிடம் உள்ளதை மறைத்து இல்லையென்று சொல்லும் இயல்பில்லாத உடையாரிடம் சென்று இரப்பது உண்மையில் இரத்தலாகக் கொள்ளப் படாதது மட்டுமன்றி, அதற்கு மாறான ஈதலே போன்ற இனிய சிறப்புடையது என்பதாகும்.