பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நல்லோர் நல்லுரை

இரண்டாவதாகக் கொள்ளத்தக்கது. கரத்தல் கனவிலும் தேற்றாதார் சிறப்பு அவரிடம் இரப்பதே ஈத லாகும் என்றால், அவர்தம் ஈதல் எத்தகைய உயர்வுடைத் தாகும் என்பது கூறாமலே விளங்கும்.

எனவே, தம்மிடம் ஒன்று இருந்து, இல்லையென்று தம்மிடம் இரந்து கேட்டவர்க்குக் கனவிலும் இல்லை’ யென்று கைவிரிக்காத பண்பினரிடம் இரத்தலும் ஈதலே போலும் சிறப்புடைத்து என்கிறார் திருவள்ளுவர்.

‘இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.”

-திருக்குறள்: 1054

2

‘கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.”

-திருக்குறள்: 1055

கவிஞன் சமுதாயத்தை ஆழ்ந்து நோக்குகின்றான். அச் சமுதாயத்தில் அவன் ஏதேனும் குறை கண்டால் அதனைப் போக்குதற்கு அவன் முனைகிறான். சமுதாயத் தில் காணப்படும் தீமையைக் களைவதற்கு அவன் சில மாற்றுகளைப்-பரிகாரங்களைச் சொல்கிறான். ஒருவர் மனத்தை உயர்த்தும், பண்படுத்தும் பண்பு படைத் தவனே ஒர் உண்மையான, உயர்ந்த கவிஞனாகக் கொள்ளப்படுவான்.

கம்பர் ஒர் உயர்ந்த புலவர். தம் கவிக்கு நாயகனாம் இராமனுடைய கோசல நாட்டைக் காணும்பொழுது இரப்பாரும் இல்லை. ஈவாரும் இல்லை; உடையாரும்