பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவிலும் தேற்றாதார் 35

இல்லை; வறியரும் இல்லை என்று பாடிப் போந்தார். இது கவிச்சக்கரவர்த்தி கனவு காணுகின்ற கோசல நாடாகும். இ த ைன க் கவிஞனின் மனத்தேர், “மனோரதம் எனலாம். கவிஞன் கனவு கண்டால் மட்டும் போதாது; நடைமுறையில் காணும் நாட்டு நடப்புகளுக்கும் வடிவம் தருதல் வேண்டும். எனவே தான், தாம் படைத்த இராமாயணத்திலேயே “அருத்தி வேதியனின் ஆசையை இரக்கும் பொழுதும் ஆசை எல்லை கடந்து போகும் தன்மையினையும் மறவாது குறிப்பிட்டுப் போந்தார்.

இதே போன்று இரவு கூறும் திருவள்ளுவர் அதனை யடுத்து இரவச்சமும் கூறப் போகிறார் என்பதனைக் காணுகின்றோம். இல்லை என்று எவரும் ஒருவரிடம் சென்று இரக்காத அந்த இழிநிலை நிலவாத சமுதாயமே வள்ளுவர் கனவு காணும் உலகச் சமுதாயம் ஆகும். ஆனாலும் நடைமுறையில் நிலவும் நிலையினையும் கருத்திற் கொண்டு இரவு’ எனும் அதிகாரத்தில் இரத்தல் பற்றிக் கூறி, அடுத்த அதிகாரமாம் இரவச் சத்தில் தம்மிடம் உள்ளதை ஒளிக்காது இரந்தவர்க்கு ஈயும் பேருள்ளம் கொண்டவரிடத்தும் சென்று இரக்காத தகைமையே-சால்பே வேண்டற்பாலது என்று இரத் தலைக் கடிந்து ஒதுக்குகின்றார் திருவள்ளுவர். இரத்தல் எனும் நிலைக்கு இடம் அளிக்காத சமுதாயம், வள்ளுவர் காணும் வளமான சமுதாயமாகும். ஆனால் இரத்தல் உலகில் என்றும் இருந்தே தீருமோ என்றும் எண்ணிப் பார்க்கிறார் திருவள்ளுவர். எனவே இல்லாதவர்களுக்கு (Have-nots) உடையவர்கள் (Haves) கொடுத்து உதவ வேண்டும் என்று இரக்கப் பண்பினை வற்புறுத்தி இரவு’ என்னும் அதிகாரத்தினைப் படைத்துள்ளார்.