பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நல்லோர் நல்லுரை

“மக்களிடை இரக்கமும் சகோதரப் பரிவுணர்ச்சியுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயல வேண்டிய பேரு ணர்ச்சிகளாகும்’ என்று ஜார்ஜ் எலியட் என்னும் பெரியார் குறிப்பிடுகிறார்.

‘அன்புண்டு இரக்கமில்லை என்று பாசாங்கு செய்ய முடியுமோ? அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகள் என்னும் ஆங்கிலக் கவிஞர் ஒருவர் (ராபர்ட் செளத்வெல்) கூறியிருப்பதனை நோக்கவேண்டும்.

‘ஒருவர் முன் நின்று இரப்பவர், அந்த இரத்தலாகிய செயலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று உளம் மறைத்து ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத் தில் இருப்பதால்தான்’ என்று இக்குறளில் திருவள்ளுவர் தெளிவுறப் புலப்படுத்துகிறார்.

இதனால் கொடுப்பவர் இருப்பதனால் இரப்பவர் உருவாகின்றார்கள் என்று ஆகின்றது. இஃது இல்லை யென்னாது மனம் உவந்து கொடுப்பதைப் பாராட்டு கின்றதா? அன்றித் துாற்றுகின்றதா?

ஒள்ளிய சீர் வள்ளுவர் முப்பாலுக்குத் தப்பாது பொருளுரைத்த தெள்ளிய கருத்தினராம் பரிமேலழகர், “அவரில்லை யாயின், (அதாவது கரப்பிலார்) மான நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்’ என விளக்க வுரை பகர்கின்றார்.

மனித குலம் மானத்தைப் பெரிதாக ஒம்ப வேண்டும் என்பது வள்ளுவர் வாய்மொழி. இரப்பவர் ஒன்று கேட்டு ‘இல்லை என்ற மறுமொழி பெறுதல் இரவினும் இழிவு, இழிவினும் இழிவாகும். எனவேதான் கரப்பிலாது மறைக் காது வழங்கும் வள்ளல்கள் வாழ்வதனால், இரப்பவர்க்கு