பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

கனவிலும் தேற்றாதார் 37

மானம் கெடவந்து உயிர் துறக்கும் நிலை ஏற்படவில்லை என்று வள்ளண்மைப் பண்பினை வாயாரப் போற் றி மொழிகின்றார் வள்ளுவர். அதனால் தான் இரவு: அதிகாரத்தின் மூன்றாம் குறளில், ,

‘கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்று

இரப்பும் ஓர் ஏர் உடைத்து’ -திருக்குறள் : 1053 என்றார். இதனால் கரவாதாரை உலகத்திற் பெறுதல் அரிது என்பதும் ஒருவாறு விளங்கும்.

எனவே இரத்தல் என்னும் தொழிலை மேற்கொள்

வோர். தம்மிடம் உள்ளதை இல்லை என்று ஒளித்துக்

கூறாத நன்மக்கள் உலகத்தில் உள்ளதனால் உயிர்க்கின் றனர் என்கிறார் வள்ளுவர். o ‘கரப்பிலார் வையகக்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது’ --

-திருக்குறள் 1055

3

‘கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்’

= -குறள் ; 1056 ‘மனிதப் பிறவியின் விழுப்பத்துக்கு அடிமையான காரணம், அப் பிறவியில் அறத்தொண்டு நிகழ்ச்சிக்கு இடம் உண்மையேயாகும்’ என்கிறார் தமிழ் முனிவர் திரு. வி. க. ‘நாம் பெறுகின்ற இன்பங்களில் நமக்குச் சலிப்பேற்படலாம்; ஆனால் தருகின்ற இன்பங்களில் அன்று’ என்கிறார் அறிஞர் ஒருவர். ‘Give me the ready hand rather than the ready tongue” ercir og saṁ zgšgave பொன்மொழி.

eu-3