பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நல்லோர் நல்லுரை

உடையாரும் இல்லாரும் நிறைந்தது சமுதாயம். இல்லாருக்கு இருப்போர் உதவினால்தான் இல்லார் உயிர்

வாழ முடியும்; இன்றேல் இல்லார் இவ்வுலகில் இல்லார்: இவ்வுலகை விட்டு மறைந்தார் என்னும் நிலை வந்துறும்.

இக் குறளில் திருவள்ளுவர், நம்மிடம் பிறருக்குத் தருவதற்கென்று ஒன்று தாராளமாக இருக்க, அதனை இல்லார் ஒருவர் கேட்டுத் தம்முன் இரந்து வந்துற்று நிற்கும் நிலையில் இல்லை யென்று ஒளித்துக் கூறும் பண்பினை இடும்பை-நோய் என்கிறார். ‘கரப்பிடும்பை” என்னும் செல்லினை ஆழ்ந்து உன்னிப் பார்க்க. கரப் பிடும்பை-அதாவது ஒன்றை உடைத்தாயிருந்து இல்லை எனப் பிறருக்கு மறைக்கும் நோய் என்று பொருள் படுவ தாகும். இதனால் திருவள்ளுவர், கரத்தல் என்பது ஒருவர்க்கு வேண்டாத பண்பு எனத் தெளிவுறுத்து கின்றார். எனவே ஒன்று உடையார் தம் ஈகைச் செயல் மேம்பட இல்லாரை எண்ணி நிற்பர். இல்லாரைக் கண்ட போது கழிபேருவகை அடைவர்.

சங்க காலத் தமிழகம் ஈண்டு எண்ணத் தக்கது.

வாரி வாரி வழங்கும் வள்ளண்மைப் பண்பு வாய்ந்த வள்ளல் ஒருவனைக் குறிப்பிட வந்த சங்க காலக் கவிஞர் ஒருவர்,

“இரவலர் வாரா ராயினும்

தேரின் தந்து ஆர்பதம் நல்கும்’

கொடைப் பண்பினை மனமுவந்து பாரட்டுகின்றார். ஒரு நாள் இரவலர் தன்னிடம் வரவில்லை யென்றாலும், தேரையனுப்பி, இரவலரைத் தேடிக்கொணர்ந்து அவர்க்கு வேண்டுவன வழங்கி யருளும் கோடா நெஞ்சின்,