பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவிலும் தேற்றாதார் 39

கொடைஞன் என வள்ளல் ஒருவனை வாயார நாவாரப் பாராட்டி மொழிகின்றார் கவிஞர்.

சங்க காலத் தலைவன் ஒருவன் வஞ்சினம் செய்யும் பொழுதும், ‘நான் கண்போற் சிறந்த என் காதலியினை விட்டு நீங்குவேனாயின், இரவலர் வாரா வைகல் பலவாகுக’ என்கின்றான். அதாவது இரவலர் என் இல்லந் தேடி வாரா தொழியும் நாள்கள் பலவாகட்டும் என்றான். இதிலிருந்து இரவலர் நாள்தோறும் தன்னிடம் வர உவக்கும் அவன் பேருள்ளம் புலனாகின்றது.

தம்மிடம் உள்ளதை ஒளிக்கும் நோய் இல்லாத வரைக் கண்டால், இருப்பவரின் கொடிய வறுமைத் துன்பம் எல்லாம் ஒருசேரக் கெட்டொழியும் என்கிறார் வள்ளுவர். + = -

தனிப்பாடல் திரட்டிலே ஒர் அருமையான பாடல். வறியவன் ஒருவன் வாழ்வில் வாட்டமுற்றான்; கொடிய வறுமை அவனை வாட்டி வதைத்தது. அவன் வாழ்நாள்கள் மெல்ல மெல்ல இல்லையாகி வந்தன. “பழுமரம் தேடிச் சென்று பயன்பெறும் பறவை போல, வள்ளல் ஒருவனை நாடிச் சென்று தன்னை வாட்டும் வறுமை யொழிந்து வளம் பெற வேண்டும் என்று அவ் வறியவன் நினைந்தான். தக்கதே நினைந்தான் அவன். நின்றையூரில் நீடு புகழ் துலங்க வாழும் காளத்திவாணன் அவன் நினைவில் வந்து நின்றான். தன்னை வாட்டும் வறுமை அவ் வள்ளலைக் கண்ட மாத்திரத்திலேயே பகலவனைக் கண்ட பனி போல் ஞாயிற்றின் முன்னர் இருள் போல் மாய்ந்தொழிதல் உறுதி என உணர்ந் தான். எனவே த்ன் நிழல்போல் தன்னை விடாது தொடரும் வறுமையை நோக்கிப் பின்வருமாறு கூறத் தொடங்கினான். ‘என்னைவிட்டு நீங்காத நிழல் போல என்னோடு வாழ்நாள் நெடுகிலும் வந்துள்ள வறுமையே