பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நல்லோர் நல்லுரை

நீ நாளைக்கு என்னோடு இருப்பாயா? வள்ளல் காளத் திவாணன் வாழும் நின்றையூர்க்கு நாளை நான் சென்ற பிறகு நீ யெங்கே? நான் எங்கே? நீ என்னை விட்டு நீங்கப் போவது உறுதி. போனால் போகிறது, நெடுநாள் பழகிய கேண்மை உடைய நீ, இன்றைக்கு மட்டும் என்னோடு தங்கி இருந்துவிடு’ என்கிறான்.

‘நீளத்திரிங் துழன்றாய் நீங்கா நிழல்போல

நாளேக்கிருப் பாயோ கல்குரவே!-காளத்தி நின்றைக்கே சென்றக்கால்-கீயெங்கே-நானெங்கே? இன்றைக்கே சற்றே இரு.’ -

இந்தப் பின்னணியில் இனிக் குறளை நோக்குவோம். தம்மிடத்தில் உள்ளதை ஒளித்து இல்லை என்று இரப்ப வர்க்குக் கூறும் இயல்பான நோய் இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் அனைத்தும் ஒரேயடியாக ஒரு மொத்தமாகக் குறைந்து கெடும் என்கிறார் வள்ளுவர்.

இக் குறளில் வறுமையே நோய் என்று குறிப்பிட்ட வள்ளுவர் கரத்தலை அதற்கீடான நோயாகக் குறிப்பிட்டிருப்பது உன்னத்தக்கது.

‘கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்’ *

-திருக்குறள் 1056