பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்தான் வரும் இன்பம்

1

‘அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற் பயனே’ என்பர் ஆன்றோர். ஒரு நூலின் பயன், அந்நூல் வாழ்கையில் மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களையும் விளக்கி வற்புறுத்தி நிற்க வேண்டும் என்பர். இந் நான்கனுள்ளும் அறம் வலியுடைத் தென்பது திருவள்ளுவர் கருத்து. காரணம், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது அறன், இம்மை, மறுமை வீடென்னும் மூன்றனையும் பயத்தலான் அவற்றினும் வலியுடைத்தென்று கூறுவர். புறநானுற்றுப் பாட லொன்றன் தொடரும் இக் கருத்துப்படப் பின்வருமாறு அமைந்துள்ளது. -

‘சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல.” -புறம் : 31

இனி, அறன் எனப்படுவது யாதெனக் காண்போம்? அறம் என்பது செயலா? அன்றிச் சொல்லா? அன்றி இவ்விரண்டிற்கும் காரணமான எண்ணமா? இம் மூன்றும் சேர்ந்ததே அறமாகும். செயலுக்கும் சொல்லிற்கும் எண்ண மே அடிப்படையாக அமைகின்றது. ஆகையால்