பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நல்லோர் நல்லுரை

எண்ணத்தின் துய்மையே தலையாயது: முதன்மை யானது. ஆகவே ஒருவர் முதற்கண் மனத்தில் மாசு மண் டாத நிலைமையினைப் பெற வேண்டும். மாசு இல்லாத தன்மையை மனம் பெற்றுவிட்டால் அங்கு அறம் அரசோச்சுவதில் தடையில்லை. மனத்தின்கண் மாசு இல் லாமல் இருக்கும் நிலையே அறம் விளங்கும் நிலையாகும். மனமாசு நீங்காமல் செய்யும் செயலும் சொல்லும் வீண் ஆரவாரமானவை; அவை அறம் என்று கொள்ளப்படா.

‘மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல ரே பிற. -திருக்குறள் : 34

மணிமே கலையாசிரியர் வாழ்க்கை வசதியற்ற

வறியவர்க்கு உணவு, உடை, உறையுள் என்ற மூன்றையும் அளிப்பதே அறமெனப்படும் என்று அறைகின்றார்.

H. :

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்.’

பிறர்க்கென உதவும் பெருமனம் யாருக்கு வரும்? மனத்துக்கண் மாசில்லாதவனுக்கே வரும் என்க. மனத்துக் கண் மாசு புகுந்துவிட்டால் அங்குப் பொறாமைப்பேய் முதற்கண் குடிபுகும். ஆசையெனும் அரக்கன் வாழ்வான்; வெகுளி எனும் வேண்டாத பண்பு வீறிடும்; இன்னாச் சொல் இனியதோர் இடம்பெறும். என்வேதான் மனத்துக் கண் மாசற்றுத் துலங்கவேண்டும்; அஃதே அறம் என் கிறார் வள்ளுவர்.

வாழ்க்கையில் இவ்வறம் விளைவிப்பன யாவை? அவை பலவாகும். முதற்கண் வாழ்க்கையில் மனிதர் வேண்டுவது