பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத் தான் வரும் இன்பம் f 43

யாது? புகழ். புகழெனின் உயிரும் கொடுக்குவர் என் பது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி வாக்கு. தோன் றிற் புகழொடு தோன்றுக’ என்றும், அஃதிலார், தோன் றலின் தோன்றாமை நன்று’ என்றும் திருவள்ளுவரே குறிப்பிட்டுள்ளார். புகழ்பட வாழ்ந்தாரே ஈண்டுப் பிறந் தார்’ என்பர். எனவே சிறப்புகளில் தலையாய சிறப் கிய புகழ், இவ்வறநெறி நிற்றலால் கிடைக்கிறது. மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அறநெறியில் நின்றவர் வாழ்விலேயே புகழான சிறப்புப் பொருந்திக் கிடக்கக் காணலாம். அடுத்து அறவழி நிற்றலால் இவ்வுலக வாழ்க் கைக்கு இன்றியமையாத பொருளும் கிடைக்கின்றது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றார் வள்ளு வர். அப்பொருளை அறம் வழங்கும் வன்மையுடைத்து. ஆகையால் அறத்தை விட உயிர்க்கு ஆக்கமானது வேறு எது? அறத்தை விட ஆக்கமும் இல்லை; அதை மறந்து விடுவதைவிடக் கெடுதியும் இல்லை. -

“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினு உங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு” -திருக்குறள் : 31.

‘அறத்தினு உங்கு ஆக்கமும் இல்லை; அதனை

மறத்திலி னுங்கில்லை கேடு.’ -திருக்குறள் , 32.

இவ்வாறு அறத்தின் பெருமையை உணர்ந்த பிறகு ஒருவர் செய்யத் தக்கது யாது? அவ்வறம் தம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அறச்செயல்களை இயலும் வகை யால் ஓயாமல் செய்யவேண்டும். செய்யத்தக்க வழியில் எல்லாம் செய்யவேண்டும்.