பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - நல்லோர் நல்லுரை

‘ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்.” -திருக்குறள் : 33.

இவ்வாறு திருவள்ளுவர் அறத்தின் இன்றியமையாமை யினைத் தெளிவாகவும் திட்பமாகவும் வலியுறுத்தக் காண்கிருேம்.

, 2

தீமை களைந்து நன்மை ஈட்டும் அறத்தின் திறம் காணப்பட்டது. அல்லது நீக்கி நல்லது நாட்டும் அறத்தின் தன்மை விளக்கப்பட்டது. திருவள்ளுவர் அறம் பற்றிய கோட்பாட்டினை மேலும் ஒரு தெளிவு தந்து விளக்கி நிற்கின்றார். அறமாவது எது? என்னும் வினாவிற்கு விடை காண முற்படுகின்றார். பொறாமை முதற்கண் மனித மனத்திலிருந்து கடியப்பட வேண்டும் என்று கருதுகின்றார். இரண்டாவதாக அவர் அகத்தை விட்டு அகலவேண்டும் என்று வற்புறுத்துகின்றார் மூன்றாவதாக வெகுளி நெஞ்சத்திலிருந்து சொல்லாகவோ செயலாக வோ வெளிப்படுதல் கூடாது என்று குறிபபிடுகின்றார். நான்காவதாக உறுதி பயக்காமல் இறுதி பயக்கும் இன் னாச் சொல்லினை அறவே நீக்க வேண்டும் என்று கூறு கின்றார்.

‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.’

-திருக்குறள் :35

அழுக்காறு என்னும் பொறாமைப் பண்பு நெஞ்சத்தில் கொஞ்சமும் தங்கக்கூடாது என்பது வள்ளுவர் வாய் மொழி. இப்பொறாமைப் பண்பு மிகுந்தால் பிறர்மேல் வடுக்கண்டு வற்றாகும் கீழ்நிலையையே ஒருவன் அடை